
போலீஸ் அதிகாரியாக தர்ஷன் நடிக்கும் படத்துக்கு ‘சரண்டர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பாடினி குமார், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ளனர்.
விகாஸ் பதீசா இசை அமைத்துள்ளார். அப்பீட் பிக்சர் சார்பாக விக்டர் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை இயக்கியுள்ள கவுதமன் கணபதி, இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.