
கடந்த ஜூன் 12-ம் தேதி, அகமதாபாத்தில் போயிங் 747 விமான விபத்து ஏற்பட்டது.
இந்த விமானத்திற்கான முதல்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
எரிவாயுவில் எதாவது பிரச்னையா?
விமானத்தில் இருந்து எரிவாயு சுத்தமாகத்தான் இருந்துள்ளது. மேலும், விமானம் எரிவாயு நிரப்பிய இடத்திலும் எந்த மாசுபாடும் இல்லை.
விமானம் கிளம்பியபோது, அங்கே தெளிவாகத்தான் வானிலை இருந்துள்ளது மற்றும் பறவைகளும் அந்தப் பகுதியில் காணப்படவில்லை.
விமானிகளுக்குப் போதுமான அனுபவம் இல்லையா?
விமானி சபர்வால் போயிங் 787 விமானத்தில் கிட்டத்தட்ட 8,600 மணி நேரங்கள் பணியாற்றியுள்ளார். விமானி குந்தர் 1,100 மணிநேரங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். ஆக, இருவரும் போதுமான அனுபவம் உள்ளவர்கள்தான்.
இருவரும் குறிப்பிட்ட விமானத்தை இயக்குவதற்கு முன்பு, போதுமான ஓய்வை எடுத்துள்ளனர். மேலும், அவர்கள் மருத்துவ ரீதியாகவும் ஃபிட்டாக இருந்துள்ளனர்.
நாசவேலை எதாவது நடந்ததா?
விமானத்தில் எந்தவித நாசவேலையும் நடக்கவில்லை. ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் முன்னரே எரிவாயு ஸ்விட்ச் பிரச்னை குறித்து எச்சரித்துள்ளது. ஆனால், அதை ஏர் இந்தியா ஆய்வு செய்யவில்லை.
விமானத்தில் எடை அதிகமான மற்றும் ஆபத்தான பொருள் எதுவும் இல்லை. எல்லாமே சரியாகத்தான் இருந்திருக்கிறது.