
நான் லோகேஷ் கனகராஜ் மீது கோபத்தில் இருக்கிறேன். அவர் எனக்கு பெரிய கதாபாத்திரத்தை கொடுக்கவில்லை. அவர் என்னை வீணடித்து விட்டார் என்று நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
துருவ் சார்ஜா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கேடி தி டெவில்’. இதில் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, ரீஷ்மா நானையா, ரமேஷ் அரவிந்த், ரவிச்சந்திரன் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேம் இயக்கியுள்ள இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.