
மயிலாடுதுறை: ‘பாமக எந்த அணியில் இணைகிறதோ, அந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” எனத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோரிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த உட்கட்சி பூசலால், பாமக தொண்டர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், பாமக – வன்னியர் சங்க தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.