
அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த சாரா என்ற இளம் பெண், தனது காதலன் தன்னை ஏமாற்றியதை அறிந்து உறவை முறித்துக் கொண்டுள்ளார். இதற்கிடையில் சாரா தனது காதலன் பரிசாக அளித்த லாட்டரி டிக்கெட்டை சரிபார்த்தபோது, அதிர்ஷ்டவசமாக அந்த டிக்கெட்டிற்கு 14,000 டாலர் பரிசு தொகை கிடைத்தது தெரியவந்ததுள்ளது.
சாரா தனது பரிசு தொகையை வங்கியில் சேமித்து, தனது எதிர்காலத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
தனது காதலனின் மோசடியால் மனம் உடைந்திருந்த சாராவுக்கு, இந்த பரிசு தொகை புதிய நம்பிக்கையை அளித்தது. இந்த சம்பவம் குறித்து சாரா கூறுகையில், “இது எனக்கு ஒரு புதிய தொடக்கத்தை அளித்துள்ளது. இந்த பணத்தை வங்கியில் சேமித்து, எனது எதிர்காலத்திற்கு பயன்படுத்த உள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.
இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதனை பலரும் “கர்மாவின் உடனடி பலன்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.