
சென்னை: “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாம் எட்டிய வளர்ச்சிக்காக, அநியாயமான தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது” என உலக மக்கள் தொகை நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், எடப்பாடி பழனிசாமியையும் அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “உலக மக்கள்தொகை நாளில், “ஒன்றிய அரசுக்கு ஒரு நினைவூட்டல்: தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது; பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது; அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது; நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சியை முன்னெடுக்கிறது.