
புதுடெல்லி: ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.