• July 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களைச் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “பிரதமர் தனது விமானத்தில் பறக்கும்போது, ​​அவர் கீழே பார்த்து, ‘அது எந்த நாடு?’ என்று கேட்பார். அது எந்த நாடு என்பதைக் கூறுவார்கள். ​​‘கவலைப்பட வேண்டாம், நாம் செல்லும் இடத்துக்கு ஒரு மணி நேரம் தாமதமாகச் செல்வோம்; இப்போது இங்கே தரையிறங்கலாம்’ என்று பிரதமர் கூறுவார். ஏனெனில், அவர் எங்கு வேண்டுமானாலும் தரையிறங்குவார். அப்படித்தான் அவர் பாகிஸ்தானிலும் தரையிறங்கினார். அங்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்தார். நாங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது, ஆனால், அவர் அங்கு தரையிறங்கலாம்!” என்று கிண்டலாகப் பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *