
புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். 2 மகன்கள் மற்றும் 2 மகள் உள்ள நிலையில், கணவன் கட்டட வேலையும் மனைவி காட்டேஜ் ஒன்றிலும் பணியாற்றி குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார்கள்.
இந்த தம்பதியின் இளைய மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக 17 வயதான மூத்த மகளின் படிப்பை நிறுத்தி இளைய மகளை கவனிக்கச் செய்திருக்கிறார்கள். 45 வயதான மனைவியும் அவ்வப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்று வீடு திரும்பிய 50 வயதான கணவன், இரவில் தன் மனைவியை தாம்பத்யத்திற்கு அழைத்திருக்கிறார். உடல்நலக்குறைவால் மனைவி மறுத்திருக்கிறார். தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டும் என தன்னுடைய சொந்த மகளை அழைத்திருக்கிறான் அந்த கொடூரன். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மூத்த மகள் தாயிடம் சொல்லி கண்ணீர் வடித்திருக்கிறார். உடனடியாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து கொடூரனை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.