
ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.
இந்தக் கருத்து மோதலில் ராமதாஸ், தன் பெயரை அன்புமணியின் பெயருக்குப் பின்னால் போடக்கூடாது என்றும், இன்ஷியலை மட்டும் போட்டுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கடுமையாகப் பேசியிருந்தார். இதற்கிடையில் அன்புமணி, ராமதாஸ் வெளியூருக்குச் சென்றிருந்த நேரத்தில் தைலாபுரம் வீட்டிற்குச் சென்று அவரது அம்மாவைப் பார்த்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 11) விருதாச்சலத்தில் பாமகவின் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “அன்புமணி அவரது வீட்டிற்குச் செல்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது. பெயருக்குப் பின்னால் என் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்றேன். என் இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
பாமக தலைவர் பதவி தேர்தல் ஆணையத்திடம் கோரி முறையான நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணியைப் பொறுத்தவரை இன்னும் முடிவெடுக்கவில்லை. பாமக எந்த அணியில் சேருகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத அளவிற்கு வெற்றியைப் பெறும். ஏனென்றால் அது அப்படிப்பட்ட பலமான கூட்டணியாக இருக்கும்.

வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்திருப்பது குறித்து, “என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். நேற்றைக்கு முன் தினம்தான் அதைக் கண்டுபிடித்தோம். அது லண்டனில் இருந்து வந்தது என்று கூறுகிறார்கள். அது அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம்” என்று பேசியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs