
ப்ரைம் வீடியோவில் ஜூலை 18-ம் தேதி ‘குபேரா’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’. அனைத்து மொழிகளிலும் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இப்படத்தினை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.