• July 11, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் தன்னைத் தவிர வேறு முக்கிய தலைகள் யாரும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உஷாராக இருப்பதாக அதிமுக-வினர் அடிக்கடி சொல்வார்கள். அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கேடிஆர்.எம்​ஜிஆரின் முரட்டு பக்​தர் என்று சொல்​லப்​பட்ட தாமரைக்​க​னி, 1991 ராஜிவ் அலை​யிலேயே ஸ்ரீவில்​லிபுத்​தூரில் சுயேச்​சை​யாக நின்று வென்​றவர்.

அதே​போல் 1996-ல், அதி​முக-வுக்கு கிடைத்த நான்கு எம்​எல்​ஏ-க்​களில் தாமரைக்​க​னி​யும் ஒரு​வர். அந்​தளவுக்கு விருதுநகர் மாவட்ட அரசி​யலில் தனக்​கென இரு இடத்தை தக்​க​வைத்​திருந்​தவர் தாமரைக்​க​னி. அப்​படிப்​பட்​ட​வ​ருக்கு 2001 தேர்​தலில் ஜெயலலிதா சீட் கொடுக்​க​வில்​லை. அவருக்​குப் பதிலாக அவரது மகன் இன்​பத்​தமி​ழனை ஸ்ரீவில்​லிபுத்​தூரில் நிறுத்​தி, சுயேச்​சை​யாக போட்​டி​யிட்ட தாமரைக்​க​னியை தோற்​கடித்​தார். இதனைத் தொடர்ந்து இன்​பத்​தமி​ழனை அமைச்​ச​ராக​வும், விருதுநகர் மாவட்​டச் செய​லா​ள​ராக​வும் ஆக்​கி​னார் ஜெயலலி​தா.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *