
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்களின் லிஸ்டைப் பார்ப்போமா…
தேசிங்கு ராஜா 2:
நடிகர் விமல் மற்றும் இயக்குநர் எழில் கூட்டணியில் உருவாகியிருக்கும் காமெடி திரைப்படம் தேசிங்கு ராஜா 2. ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ளது.
ஓஹோ எந்தன் பேபி:
நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பில் உருவாகியுள்ள ரொமாண்டிக்-காமெடி திரைப்படமான இத்திரைப்படத்தில் அவருடைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்று (ஜுலை 11 – வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது.
மாயக்கூத்து:
மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகர்கள் சாய் தீனா, நாகராஜன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கியுள்ள மாயக்கூத்து திரைப்படம் இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ளது.

மிஸஸ் & மிஸ்டர்:
நடிகை வனிதா விஜயகுமார் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் மிஸஸ் & மிஸ்டர். இத்திரைப்படம் இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ளது.
மாலிக் (இந்தி):
நடிகர்கள் ராஜ்குமார் ராவ், மனுஷி சில்லர் நடிப்பில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் திரைப்படமான இது, இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ளது.
Aankhon Ki Gustaakhiyan (இந்தி):
நடிகர் விக்ராந்த் மாசி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ளது.

Oh Bhama Ayyo Rama (தெலுங்கு):
தெலுங்கு நடிகர் சுஹாஸ் மற்றும் நடிகை மாளவிகா மனோஜ் நடிப்பில் உருவாகியுள்ள இந்தக் காமெடி திரைப்படம் இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ளது.
Soothravakyam (மலையாளம்):
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் த்ரில்லர் திரைப்படம், இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ளது.
Superman (ஆங்கிலம்):
புதிய ரீபூட்டில் டிசி யூனிவர்ஸாக கட்டமைக்கும் முதல் திரைப்படம் சூப்பர்மேன். பிரபல திரைப்பட இயக்குநரும் டிசி ஸ்டுடியோஸ் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேம்ஸ் கன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் டேவிட் காரன்ஸ்வெட் சூப்பர்மேனாக நடித்துள்ளார். இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ள இத்திரைப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
கலியுகம் (தமிழ்) – சன் நெக்ஸ்ட்:
சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் கதையம்சம் கொண்டு கடந்த மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கலியுகம்’. ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் கிஷோர் நடித்த இத்திரைப்படம் இன்று (ஜூலை 11) சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகியுள்ளது.

நரிவேட்டா(மலையாளம்) – சோனி லிவ்:
நடிகர்கள் டொவினோ தாமஸ் , சூரஜ் , சேரன் நடிப்பில் கடந்த மே 23-ம் தேதி வெளியான திரைப்படம் ‘நரிவேட்டா’. காவல் துறையினர் பற்றியக் கதையைப் பின்னணியாகக் கொண்ட இத்திரைப்படம், தற்போது (ஜூலை 11) சோனி லைவ் தளத்தில் வெளியாகியுள்ளது.
டிடெக்டிவ் உஜ்வாலன் (மலையாளம்)- நெட்ப்ளிக்ஸ்:
கடந்த மே 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் தற்போது (ஜூலை 11- வெள்ளிக்கிழமை) நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
மிஸ்டர் & மிஸஸ் பேச்சுலர் (மலையாளம்) – மனோரமா மேக்ஸ்:
நடிகர்கள் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் கடந்த மே 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘மிஸ்டர் & மிஸஸ் பேச்சுலர்’ தற்போது (ஜூலை 11) ஓடிடியில் வெளியாகியுள்ளது.
8 வசந்தலு (தெலுங்கு) – நெட்பிளிக்ஸ்:
அனாந்திகா சனில்குமார் நடிப்பில் கடந்த ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘8 வசந்தலு’. இத்திரைப்படம் இன்று (ஜூலை 11) நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

மிஸ்டர் ராணி (கன்னடம்) – லயன்ஸ்கேட்:
பெரிய கதாநாயகனாக வர வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இளைஞன், பெண் வேடமிட்டு தவறுதலாக பெரும் கதாநாயகியாக மாறுகிறார் என்ற பின்னணியில் உருவான திரைப்படம் ‘மிஸ்டர் ராணி’. இத்திரைப்படம் தற்போது (ஜூலை 11) லையன்ஸ்கேட் தளத்தில் வெளியாகியுள்ளது.
நேரடி ஓடிடி வெளியீடு:
ஆப் ஜெய்சா கோய் (இந்தி)- நெட்பிளிக்ஸ்:
நடிகர் மாதவன் நடித்துள்ள இந்தி திரைப்படமான இது , நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கான நேரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. சமஸ்கிருத ஆசிரியருக்கும் , ஃபிரெஞ்சு பயிற்றுவிப்பாளருக்கும் நடக்கும் காதல் கதைக் கொண்ட இத்திரைப்படம், இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ளது.