
நேற்று பாமக தலைவர் அன்புமணி தைலாபுரத்திற்கு சென்று, அவரது தாயை சந்தித்து இருந்தார். அப்போது ராமதாஸ் வீட்டில் இல்லை. அவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்காக மயிலாடுதுறைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், அன்புமணி தைலாபுரத்திற்கு சென்றது பரபரப்பாக பேசப்பட்டது.
இன்று மயிலாடுதுறையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது…
`அன்புமணி வீட்டிற்கு வந்தது குறித்து…’
`அன்புமணி வீட்டிற்கு வந்திருக்கிறார். இதெல்லாம் ஒரு கேள்வியா?’
`பாமகவின் வாக்குகள்…’
`பாமக எந்த அணியில் சேர்கிறதோ, அந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
பாமக இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றிபெறும். காரணம், அமையப்போகும் கூட்டணி, பலமான கூட்டணி.’
`ராமதாஸ் நடத்த உள்ள கூட்டத்தின் அன்புமணி கலந்துகொள்வாரா?’
`போக போக தெரியும் (பாடுகிறார்)’
`மாநாட்டில் உங்களது மகளை தலைவராக அறிவிக்க உள்ளீர்களா?’
`இதில் உண்மை இல்லை.’
`திமுக உடன் கூட்டணியா?’
`இங்கு 10 காக்காகள் உள்ளது. அதில் 5 வெள்ளை காக்கா. அந்த 5 வெள்ளை காக்காகள் உங்களிடம் இதை சொன்னதா? ’

`அப்போது, அதிமுக உடன் கூட்டணியா?’
`இங்கே 49 கட்சிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இன்றைக்கு யார் கட்சி ஆரம்பிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ’
`ராமதாஸ் என்கிற உங்களது பெயரை போடக் கூடாது என்று கூறியிருக்கிறீர்கள்? ’
`இனிஷியல் போட வேண்டும் என்று கூறினேன்.’
`மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில்லையே?’
`இதுகுறித்து அறிக்கைகள் வெளியிட்டு இருக்கிறோம். வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது. நாங்கள் இது குறித்து வலியுறுத்துவோம்.
பிரதமர் என்னுடைய நண்பர். கேட்டு வாங்குவேன். கேட்டால் கிடைக்கும்.’
`அறநிலையத் துறை சொத்துகளில் கல்லூரிகள்…?’
`அறநிலையத் துறையில் சொத்துகள் அதிகம் இருந்தால், இதை செய்யலாம். ’
`ஆளவந்தார் அறக்கட்டளையின் பாதுகாப்பு குறித்து…’
`நாங்கள் பல போராட்டங்கள் செய்தோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் சரிசெய்வோம். ’