
இந்தியாவில் ‘வாரிசு அரசியல்’ விவகாரம் பேசுபொருளானது போல சினிமா துறையிலும் பேசுபொருளானது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதியின் முதல் படமான ‘பீனிக்ஸ்’ வெளியாகுவதற்கு முன்பே ‘நெப்போடிசம்’ என கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், நிகழ்ச்சி தொகுப்பாளர், “ஒரு நேப்போ கிட் என்ற முறையில், நீங்கள் உங்கள் அப்பாவை விட கடினமாக உழைக்க வேண்டுமே” எனத் தெரிவித்தார்.
அதற்கு அவர் அளித்த பதிலில், “ஒருவரை நேப்போ கிட் என்று அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதாவது நேப்போ கிட் என்றால் உங்கள் தந்தைக்கு ஏதோ ஒரு மரபு இருந்தது என்று அர்த்தம், இல்லையா?. பொதுவான ஒருவர் புதிதாக ஒன்றைத் தொடங்குகிறார் என்றால், ஒரு நேப்போ கிட் அவரின் அப்பாவை விட கடினமாக உழைக்க வேண்டும்.
அந்த உழைப்பை செலுத்துவதற்கும் தடை இருக்கிறது, அதைக் கடக்க போராட வேண்டியிருக்கும். ஆனால் அந்தப் போராட்டங்கள் உங்களுக்கு நிறைய விஷயங்களை கற்பிக்கும். சிறுவயதிலிருந்தே கஷ்டங்களைச் சந்தித்து இங்கு வந்துள்ளேன்.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…