• July 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் விஷ்வ இந்து ரக் ஷா பரிஷத் சார்​பில் முஸ்​லி​மாக மதம் மாறிய 12 பேர் தாய் மதமான இந்து மதத்​துக்கு திரும்​பும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி நடை​பெற்​றது. அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணைக்​குப் பிறகு, பல்​ராம்​பூரை சேர்ந்த ஜுங்​கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்​றும் நெருங்​கிய நண்​பர் நீத்து நவீன் ரொஹ​ரா(எ) நஸ்​ரின் உள்​ளிட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்த வழக்​கில் ஏடிஎஸ் படை​யினர் 14 பேரை தேடி வரு​கின்​றனர். ஜுங்​கூர் பாபா​வால் மதம் மாற்​றம் செய்​யப்​பட்​ட​வர்​களிடம் ஏடிஎஸ் படை​யினர் நேரில் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். மும்​பை​யில் ஒரு பிரபல தர்கா​வுக்கு வெளியே ஜுங்​கூர் பாபா, மோதிரங்​களை விற்று வந்​துள்​ளார். அப்​போது​தான் அவருக்கு துபாய் உள்​ளிட்ட வளை​குடா நாடு​களில் மதம் மாற்​றத்​துக்கு நிதி அளிக்​கும் அமைப்​பு​களு​டன் தொடர்பு ஏற்​பட்​டுள்​ளது. அவர்​கள் உதவி​யால் ஜுங்​கூர் பாபா, மகா​ராஷ்டி​ரா​வில் மதம் மாற்​றத்​தில் ஈடு​பட்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *