
139 தெருநாய்களுக்குக் கருத்தடைச் செய்ய திமுக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியதாக அதிமுகவின் ஐ.டி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவு என்று பதிவிடப்பட்டது.
அதிமுக ஐ.டி விங்கின் முழு பதிவு இதோ…
தெரு நாய்களிடமும் ஊழல் செய்த திமுக!!
சென்னை மாநகராட்சியில் “தெரு நாய் கருத்தடை திட்டம்” மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை செலவழித்தது அம்பலம்!!!
அன்று சக்கரையை தின்ற எறும்பிலிருந்து தொடங்கிய திமுகவின் ஊழல் இன்று கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்கள் வரை தொன்று தொட்டு தொடர்கிறது!!
தெரு நாய்களிடமும் ஊழல் செய்த திமுக!!
சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை செலவழித்தது அம்பலம்!!!
அன்று சக்கரையை தின்ற எறும்பிலிருந்து தொடங்கிய திமுகவின் ஊழல் இன்று கருத்தடை செய்யப்பட்ட தெரு… pic.twitter.com/jF44zcx5S7
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) July 4, 2025
இதை ஃபேக் செக் செய்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில், “கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 67,806 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
இதில் ஜூன் 2025-ல் மட்டும் 139 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,11,371 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்காக 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 3 கோடியே 51 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது” என்று பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையின் கால்நடை மருத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.