• July 11, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தேனி வனப் பகு​தி​யில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்​கும் போராட்​டம் நடத்​தப்​படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். மதுரை மாவட்​டம் விராதனூரில் ‘மேய்ச்​சல் நிலம் எங்​கள் உரிமை’ என்ற பெயரில் ஆடு-​மாடு​கள் மாநாடு நேற்று நடை​பெற்​றது.

இதில் சீமான் பேசி​ய​தாவது: ஆடு, மாடு​கள் எங்​களின் செல்​வங்​கள். எங்​கள் வாழ்க்​கை, கலாச்​சா​ரத்​துடன் இணைந்து வாழும் உயி​ரினங்​கள். ஒவ்​வொரு​வர் வீட்​டிலும் உறவினர்​போல ஆடு, மாடு​களை வளர்த்து வருகிறோம். காடும், காடு சார்ந்த இடங்​களில் வாழ்ந்த ஆடு, மாடு​கள், தற்​போது அதே காட்​டுக்​குள் நுழைய தடை விதிக்​கப்​படு​கிறது. இந்த தடையை உடைக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *