
சென்னை: சேலம் முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது, அவருக்கு ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பயணம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்ட வெள்ளி வாள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.