
சென்னை: தன்னைப் பற்றியும் தனது கணவர் விக்னேஷ் சிவன் பற்றியும் சமூக வலைதளங்களில் பரவிய ‘பிரேக்-அப்’ வதந்திகளுக்கு நடிகை நயன்தாரா முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் என்ற பெயரில் ஒரு புகைப்படம் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதில் “ஒரு முட்டாளை திருமணம் செய்யும்போது திருமணம் என்பது ஒரு தவறு என்று ஆகிறது. உங்கள் கணவரின் நடவடிக்கைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம் ஆண்கள் உண்மையில் வளர்வதே இல்லை” என்று வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.