• July 10, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

கல்யாணம் என்றாலே காலில் சலங்கை கட்டிக்கொண்டு கடைசி நிமிடம் வரை இழுத்து  போட்டு வேலை செய்யும் நம் குடும்ப உறவுகளுக்கு மத்தியில், எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வின்  திட்டமிடல் சற்று வித்தியாசமாக இருக்கும். அவர்கள் வீட்டில் நடந்த மூன்று   கல்யாண ஏற்பாடுகளை முழுமையாக அறிந்தவன் என்ற வகையில் இந்த  பதிவை பகிர்கிறேன் .

தன்  வீட்டு பிள்ளைகளுக்கு திருமணம்  முடிவான  தேதியிலிருந்து முகூர்த்த தினத்திற்கு இடைப்பட்ட நாட்களை சரியாக கணக்கிட்டு மொத்த நாட்களில்  திருமண நாட்களுக்கு முந்தைய ஏழு நாட்களை ஒதுக்கிவிட்டு  மீதம்  உள்ள நாட்களை  சமமாக பங்கிட்டு குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் வசதிக்கேற்ற  பணிகளை ஒதுக்கிவிடுவார் .

மண்டபம் பார்த்தால் , பத்திரிக்கை அடித்தல் , சமையல் , உடை அலங்காரம் , வரவேற்பு ஏற்பாடுகள், அழைப்பிதழ் கொடுத்தால், சீர் வரிசை வாங்குதல்  என  நடக்கும் முன் ஏற்பாடுகளை  , இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அனைவரும் ஒன்றாக அமர்ந்து திருமண  நிலவரங்களை கலந்து பேசி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவார்கள்

சரியாக திருமணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பு அனைத்து ஏற்பாடுகளையும் மொத்தமாக முடித்துவிட்டு , ஒரு நாள்  ஒதுக்கி சரிபார்ப்பார்கள். எல்லாம் சரியாக இருக்கிறது என்று  ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு ,  மொத்த குடும்ப  உறுப்பினர்களும் ஏற்கனவே திட்டமிட்டபடி மணப்பெண் / மணமகளுடன் ஊட்டி , கொடைக்கானல் போன்ற  சுற்றுலா தளங்களில் சென்று ஐந்து நாட்கள் நன்றாக ஓய்வு எடுத்து ஜாலியாக பொழுதை  கழிப்பார்கள்.

ஒருவருக்கும் ஒரு வேலையும் இருக்காது . நன்றாக ஓய்வு எடுத்து நன்றாக சாப்பிட்டு புத்துணர்ச்சியோடு  திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சரியாக வீடு திரும்பும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவ்வளவு  புத்துணர்ச்சி இருக்கும் .அக்கம் பக்கம் உள்ளவர்கள் , என்ன இந்த வீட்டை பார்த்தால் கல்யாண வீடு மாதிரியே தெரியலையே என்று பேசும் அளவிற்கு ஏற்பாடுகள் மறைமுகமாக  போய்க்கொண்டிருக்கும்

அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து  வைத்து இருந்தால் கடைசி நிமிட பதட்டம் , குழப்பம்  இல்லாமல்  மண்டபத்தில் , யார்  வீட்டு கல்யாணம் போன்றோ ரொம்ப கூலாக , வரும் விருந்தினர்களை கவனிப்பார்கள். யாரிடமும் எந்த பதட்டமோ , குழப்பமோ இருக்காது.

சரியான திட்டமிடலில் கல்யாணம் போன்ற பெரிய நிகழ்வுகளை துல்லியமாக  செய்து முடிக்க முடியும் என்று  நிரூபிக்கும் உறவினரிடம் இது குறித்து ஒரு முறை கேட்டேன் .

ஆமாங்க .. கல்யாணம் , வரவேற்பு எல்லாம் ஒரு வித  பிக்சட் ப்ரோக்ராம்.. கடைசி நேரம் வரை வேலைகளை இழுத்து செல்வதால் ,பதட்டம் , பண விரயம் , களைப்பு எல்லாம் ஏற்பட்டு வீட்டு திருமணத்தை நம்மால் ரசிக்க முடியாமல் போய்விடும் .

பெரும்பாலான  திருமணங்களில் நெருங்கிய உறவுகளே கூட சில நேரங்களில் முகூர்த்தத்தை நேரில் பார்க்க முடியாமல் போயிருக்கும் அதோட வீட்டு பெண்கள் ரொம்ப களைப்பா இருப்பார்கள் , இதையெல்லாம் தவிர்க்க நினைத்து முதல் திருமணத்தில் திட்டமிட்டேன் . அதில் ஏற்பட்ட அனுபவங்களை கொண்டு அடுத்தடுத்து  திருமணங்களில்  இன்னும் சிறப்பாக செய்தேன் என்றார், சிம்பிளா சொன்ன வீடு பெண்களை டயர்டா இல்லாமல் வெச்சுக்கினாலே போதும் .. எல்லா நிகழ்ச்சிகளையும்  அனுபவித்து ரசிக்கலாம் என்றார்.  

சந்தோஷமாக நடக்கும்  திருமணங்களை  மகிழ்வாக கொண்டாட இது போன்று திட்டமிட்டு நடத்தி காட்டும்  உறவினரை போன்று முடிந்தால் நாமும் முயற்சி செய்து பார்க்கலாம்.

 அதிஷ்யன் மேதாவி 

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *