
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ‘வயது முதிர்வால் ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார்’ என்று கூறியிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்திருக்கிறார்.
கும்பக்கோணத்தில் இன்று( ஜூலை 10) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராமதாஸ், “ இந்த 5 வயசு குழந்தைதான், 3 வருஷத்துக்கு முன்னாடி உங்களை தலைவராக்கியது.
என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரைப் பயன்படுத்தக்கூடாது. இனிஷியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார். ராமதாஸின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகி இருக்கிறது.