
கும்பகோணம்: ‘என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக்கூடாது. வேண்டுமானால் என் இனிஷியலைப் போட்டுக் கொள்ளலாம்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்
கும்பகோணத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி – வன்னியர் சங்க தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பொதுச் செயலாளர் முரளி சங்கர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ், “5 வயது குழந்தை போல் உள்ளீர்கள் என ஒருவர் சொன்னார். அந்தக் குழந்தைதான் 3 ஆண்டுக்கு முன்பு அந்த ஒருவரை தலைவராக்கியது.