
புதுடெல்லி: கர்நாடகாவில் முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பாக காங்கிரஸில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "முதல்வர் பதவி தொடர்பாக எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை. இது எனது பதில். முதல்வர் பதவி காலியாக இல்லை என்று டி.கே.சிவகுமாரும் கூறி இருக்கிறார். கட்சி மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் இருவரும் அதற்கு கட்டுப்படுவோம்" என கூறினார்.