• July 10, 2025
  • NewsEditor
  • 0

முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் வந்தார். நேற்று 6 கிலோ மீட்டர் ரோடு ஷோ சென்ற பிறகு கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். இன்று சன்னதி தெருவில் வீடுகளில் ஓரணியில் தமிழ்நாடு குறித்து பரப்புரை செய்தவர் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் கலந்து கொண்டார்.

முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்ததுடன், புதிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருவாரூர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின்

புதிய அறிவிப்புகள் வெளியிடாமல் போவானா?

பின்னர் ஸ்டாலின் பேசியதாவது, “திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12ம் திறக்கப்படுகிறது. விளைச்சல் பெருகியுள்ளது. விவசயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது. எந்த மாவட்டத்துக்கு போனாலும் புதிய அறிவிப்புகள் வெளியிடுவேன். அப்படி இருக்கையில் என்னுடைய சொந்த மாவட்டத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிடாமல் போவானா, அப்படி சென்றால் நீங்கள் தான் என்னை விட்டு விடுவீர்களா.

’நெல் ஜெயராமன்’ – நினைவுச்சிலை

பழமையான ஜூபிளி மார்க்கெட் பகுதியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். மாணவர்கள் பயன் பெறும் வகையில் வண்டாம்பாளையத்தில் மாதிரி பள்ளி அமைக்கப்படும். ஆறுகள், வாய்க்கால்கள், மதகுகள் உள்ளிட்டவை சீரமைக்கப்படும். பாரம்பர்ய நெல் ரகங்களை தன் வாழ்நாள் முழுவதும் பேனி பாதுகாத்த ’நெல் ஜெயராமன்’ அரும் பணியை போற்றும் வகையில் திருத்துறைப்பூண்டியில் அவருக்கு நினைவுச்சிலை அமைக்கப்படும். நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன் தமிழ்நாட்டு வரலாற்றில் இவ்வளவு திட்டங்களை எந்த அரசும் செய்திருக்காது.

திருவாரூர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின்

நெருக்கடியான சூழலில், பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியில், நமக்கு இடையூறாக இருக்க கூடிய ஒன்றிய அரசை சமாளித்து இவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறோம். தொடர்ந்து செய்யத்தான் போகிறேன். இதையெல்லாம் பார்த்து தாங்கி கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி இப்போது என்ன செய்கிறார். தமிழ்நாட்டை மீட்போம்… சாரி தமிழகத்தை மீட்போம் என்கிற பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

அதிமுகவை மீட்க முடியாத இவர்…

தமிழ்நாடுனு சொல்ல கூடாதுனு சொல்கிற கூட்டத்துக்கிட்ட தற்போது அதிமுகைவும் சேர்த்து விட்டார். அதிமுகவை மீட்க முடியாத இவர் தமிழகத்தை மீட்க போகிறாராம். பழனிசாமி அவர்களே உங்ககிட்ட இருந்து தமிழ்நாடு ஏறகனவே மீட்கப்பட்டு விட்டது. கூவத்தூரில் ஏலம் எடுத்து கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் என தமிழ்நாடு பார்க்காத அவலமான ஆட்சி நடத்தினீர்கள். கொஞ்ச நஞ்சமல்ல செஞ்ச குற்றங்களுக்கு காப்பாத்தி கொள்வதற்காக ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழர்கள் உரிமைகளையும் அடகு வைத்தீர்கள்.

ஸ்டாலின்

நீங்க செஞ்ச கேடுகள் ஒன்றா, ரெண்டா. அவற்றை சரி செய்து இன்று இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் வளர்ச்சி தான் நம்பர் ஒன் என இதை நான் சொல்லவில்லை ஒன்றிய அரசால் சொல்லப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் இதை மறுக்கவும், மறைக்கவும் முடியவில்லை. அந்த வகையில் தமிழ்நாட்டை இன்று வளர்த்தெடுத்து இருக்கிறோம். வெளிமாநில மக்கள் தமிழ்நாட்டை பெருமையாக பேசுகிறார்கள். இவை உங்களுக்கு எங்கு தெரியப்போகுது பழனிசாமி. உங்களுக்கு தெரிந்தது எல்லாம் துரோகம் செய்வது மட்டும் தான். உங்களை கொண்டு வந்தவர்களுக்கு துரோகம் செய்து வெளியில் அனுப்புனீர்கள்.

துரோகம் செய்து கூட்டணி வைத்தீர்கள்

உங்களை நம்பி கொடுக்கப்பட்ட கட்சிக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்து கூட்டணி வைத்தீர்கள். ஆட்சியில் இருந்த போது உரிமைகளை அடகு வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தீர்கள். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி கொடுப்பதில்லை. நாம் கொடுக்குற ஜி.எஸ்.டியிலிருந்தும் நிதி கொடுப்பதில்லை. சிறப்பு திட்டங்கள் எதுவும் கிடையாது. ஏன் ஒன்றிய அரசு திட்டங்களுக்கு கூட நாம தான் நிதி கொடுக்கிறோம். பள்ளி கல்வி நிதியை நமக்கு மட்டும் கொடுக்கவில்லை.

திருவாரூர் அரசு விழாவில் ஸ்டாலின்

தமிழ் வளர்ச்சிக்கு நிதி இல்லை. தமிழ் பெருமைகள் வெளி வரக்கூடாது என கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கிறார்கள். கீழடி என்றால் பழனிசாமிக்கு என்ன தெரியும். தொகுதி மறுவரை, வாக்காளர் குளறுபடினு தமிழகத்தின் எல்லா உரிமைகளையும் பறிச்சவங்க கூட கூட்டணி வச்சிக்கிட்டு எப்படி உங்களால் கூச்சம் இல்லாமல் பயணம் செய்ய முடியுது. வாய்க்கு வந்ததெல்லாம் பேச முடியுது.

பா.ஜ.க-வின் ஒரிஜினல் வாய்ஸாக மாறி விட்டார்

இந்து சயம அறநிலைத்துறை நிதியில் பள்ளி கல்லூரி கட்டக்கூடாது என்கிறார். இதுக்கு முன்பு பா.ஜ.கவுக்கு வெரும் டப்பிங்க் வாய்ஸ் கொடுத்தார். இப்போது பா.ஜக-வின் ஒரிஜினல் வாய்ஸாக மாறி விட்டார். அறநிலையத்துறை நிதியில் கல்லூரி தொடங்க சட்டம் உள்ளது. இது கூட தெரியாமல் நீங்கள் எப்படி முதலமைச்சராக இருந்தீர்கள் என தெரியவில்லை. பக்சதவச்சலம் காலம் முதல், எம்.ஜி.ஆர் காலத்தில் பழனி ஆண்டவர் கல்லூரி தொடங்கப்பட்டது. அந்த கல்லூரிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டி நீங்கள் திறந்து வைத்த போது மயக்கத்தில் இருந்தீர்களா.

ஸ்டாலின்

பா.ஜ.கவினர் கூட இது குறித்து பேசுவதில்லை. ஆனால் பழனிசாமி மட்டும் பேசுகிறார். வடிவேலு காமொடி போல் கொடுத்த காசுக்கு மேல் கூவுவதாக பா.ஜ.க-வினரே பேசுகின்றனர். படிப்புன்னா உங்களுக்கு ஏன் கசுக்குது. கல்விக்காக உண்மையாகவே குரல் எழுப்புவதாக இருந்தால் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டம் இயற்றி இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. அதற்கு ஆளுநர் இதுவரை அனுமதி தரவில்லை. இதைவிட ஆளுநருக்கு என்ன வேலை, இதற்காக குரல் கொடுக்க உங்களுக்கு நெஞ்சுரம் இருக்கிறதா.

நீங்கள் ஒன்றிய அரசுக்கிட்ட கேட்டாலும், கேட்காவிட்டாலும் நாங்கள் கலைஞர் பல்கலைக்கழகத்தை சட்டரீதியாக போராடி உறுதியாக அமைப்போம், பழனிசாமி அவர்களே, மக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசிக்கொண்டு தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நப்பாசையோடு இங்கு என்ன பயணம் செய்தாலும் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். துரோகம் தான் உங்க ட்ராக் ரெக்கார்டு. துரோகங்கள் தான் உங்க ஹிஸ்ட்ரி. தமிழ்நாட்டை வஞ்சிக்க கூடிய எதிரிகள் எப்படி வேண்டு மானாலும் வரட்டும். மக்கள் எங்களுடன் ஒற்றுமையாக ஓரணியில் நிற்க வேண்டும். மண், மொழி, மானம் காக்க நாங்கள் துணை நிற்போம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *