
சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
நாடு முழுவதும் சூதாட்ட செயலிகளால் பணத்தை இழந்து, பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாகச் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இதனால் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்வதையும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டு இருந்தது.
ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரணிதா உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

மேலும் இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…