• July 10, 2025
  • NewsEditor
  • 0

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இவர் சமீபத்தில், தனது ஆறுமாதக் குழந்தைக்கு கல்வி பயிற்சி தருவதுப்போல புரோமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார்.

அதில் தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என பல விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.

இந்தக் கருத்துகள் பொய்யானது என்று தமிழ்நாடு அரசு ஃபேக்ட் செக் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது…

குழந்தைகளுக்கு கல்வி பயிற்சி

“ஹெகுரு பயிற்சி சர்ச்சை : தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளதாகத் தவறான தகவலைப் பரப்பும் யூடியூப் தம்பதி!

ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்தரஜா மற்றும் அவரது கணவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி சர்ச்சையான நிலையில், அதற்கு அவர்கள் விளக்கமளித்து வெளியிட்ட காணொளியில் பல தவறான தகவல்கள் உள்ளன.

தவறான தகவல் 1 : ஹெகுரு என்ற கல்விமுறை/பயிற்சியைப் பற்றி இந்திய அரசு நவ்சேத்னா என்ற வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து தான் இந்த பயிற்சி மையம் செயல்படுகிறது.

இது முற்றிலும் பொய்யான தகவல். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட Navchetana – National framework for early childhood stimulation for children from birth to three years, 2024. இது குழந்தை நலன் மற்றும் பராமரிப்பு குறித்த கட்டமைப்பு தொடர்பான ஆவணம். இதில் ஹெகுரு குறித்தோ, Right-Brain activation குறித்தோ எந்த தகவலும் இல்லை. இதிலுள்ள “Early childhood stimulation” என்ற வார்த்தையை மட்டும் வைத்து, இந்த கட்டமைப்பு குறித்த செய்திகளைத் திரித்து கூறுகின்றனர்.

இந்திரஜா - கார்த்திக்
இந்திரஜா – கார்த்திக்

தவறான தகவல் 2 : தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறனோ, மூளை வளர்ச்சியோ குறைந்ததாக எந்த தரவுகளும் இல்லை. இந்த தகவல் அவர்கள் குறிப்பிடும் நவ்சேத்னாவிலும் இல்லை.

தவறான தகவல் 3 : ஒன்றிய அரசு இந்த Right-Brain activation பயிற்சி முறையை செயல்படுத்த தனியாக பட்ஜெட் ஒதுக்கியுள்ளது.

அரசாங்கம் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த Right-Brain activation அல்லது ஹெகுரு போன்ற பயிற்சிகளை ஊக்குவிக்கவோ, நடைமுறைப்படுத்தவோ அரசு எந்தத் தொகையும் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை.

கார்த்திக் - இந்திரஜா
கார்த்திக் – இந்திரஜா

தவறான தகவல் 4: குழந்தை பிறந்தவுடன் கூட அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

இது திரிக்கப்பபட்ட தகவல், நவ்சேத்னா குழந்தைகளை மூன்று வயது வரை வீட்டில் வளர்ப்பதையே ஊக்குவிக்கிறது. குழந்தையைப் பராமரிக்க வாய்ப்பில்லாத நிலையில் அங்கன்வாடியில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கிறது.

மேலும், ஹெகுரு ஒரு கல்விமுறை இல்லை, இது ஒரு Activity என்றும் கூறுகிறார். இதுவும் தவறான தகவல். சென்னையில் செயல்படும் ஹெகுரு பயிற்சி மையத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இது ‘JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION’ என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இணையதளப் பக்கத்திலும் “RIGHT BRAIN EDUCATION” என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.

தவறான தகவல்களைப் பரப்பாதீர்!”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *