
இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
25 வயதான இவர் இதுவரை இரண்டு போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, அதில் ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
மேலும், கேப்டன் பதவியைப் பெற்ற பிறகு அவரது பேட்டிங் முன்னேறி இருக்கிறது.
இந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் 585 ரன்கள் சேர்த்து அசத்தி இருக்கிறார். இந்நிலையில் முன்னாள் கேப்டன் கங்குலி, சுப்மன் கில் குறித்து தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
“சுப்மன் கில் ஆடுவதிலேயே இதுதான் சிறந்த ஆட்டம் என்பதாகப் பார்க்கிறேன். ஆனால் இது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை.
அவரது செயல்பாடு அபாரமானதாக இருந்தது. அவரது கிரிக்கெட் வாழ்வு புதிய திசையை நோக்கிச் செல்லும் என்று நம்புகிறேன்.
சுப்மன் கில் நீண்ட நாள் நல்ல பேட்ஸ்மேனாக இருப்பார். இப்போதுதான் கேப்டனாக ஆகியிருக்கிறார். இனி வரும் நாட்களில் அவருக்கு அழுத்தம் அதிகரிக்கும்.
இங்கிலாந்து தொடரின் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவருக்கான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே செல்லும்” என்று கங்குலி தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…