
மைசூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாச‌ன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 45 வயதுக்குட்பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தனர். இதனால் பீதியடைந்த மக்கள் மைசூருவில் உள்ள பிரபல ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை செய்துகொள்வதற்காக குவிகின்றனர். அதிகாலை தொடங்கி இரவு வரை காத்திருந்து இதய செயல்பாடு குறித்த பரிசோதனைகளை செய்து கொண்டு செல்கின்றனர். மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பிவழியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மருத்துவமனை தரப்பும், ஹாசன் மாவட்டத்தில் 45 வயதுக்குட்பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த செய்திகள் பரவிய பின்னரே இந்த அளவுக்குக் கூட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மருத்துவ கண்காணிப்பாளரின் அறிவுரை: இது குறித்து மைசூரு ஜெயதேவா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்ட கேஎஸ் சதானந்த் கூறுகையில், “ஊடக செய்திகளைப் பார்த்துவிட்டு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை செய்து கொள்வது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்துவிடாது. மேலும், மக்கள் இந்த மருத்துவமனையை மட்டுமே நாடுவதை விடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கும் செல்லலாம்.