
சென்னை: தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக நவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய செயலியின் செயல்பாடு குறித்து, கட்சியின் நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. தவெக சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சார பயிற்சிப் பட்டறை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பொதுச்செயலாளர் தலைமை வகித்தார். இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அந்த மாவட்டத்தின் தொழில்நுட்ப அணியில் இருந்து 2 ஐடி விங் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.