
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் பணியிடங்களை அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. மேலும், மொத்த விற்பனையகங்களும் செயல்பட்டு வருகின்றன.