
சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதை விடுத்து சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக மக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வரும் 15-ம் தேதி தொடங்கி டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு தினமும் வழங்கப்பட வேண்டிய உணவை வழங்காமல் பறித்து வைத்துக் கொண்டு ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்குவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலையோ, அதைவிட மோசமான ஏமாற்று வேலை தான் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஆகும். இத்திட்டத்தின் பெயரால் மக்களை அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.