
மதுரை: “இஸ்லாமிய விசாரணை கைதிகளின் தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் திமுக ஆட்சியை வீழ்த்தும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலில் விசாரணைக் கைதிகள் போலீஸ் பக்ரூதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “போலீஸ் பக்ரூதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் விசாரணை கைதிகளாக உள்ளனர்.