• July 9, 2025
  • NewsEditor
  • 0

உடனடியாக திருமணம் நடக்கவும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சங்கல்பியுங்கள்! கல்யாண பிராப்த பூஜை! இங்கு கட்டப்படும் கங்கணம் பலருக்கும் திருமண வரத்தைக் கொடுத்துள்ளது. 20.7.25 நாளில் நடைபெறும் கல்யாண பிராப்த பூஜையில் கலந்து கொள்ளுங்கள். சிறப்பான வரனைப் பெறுங்கள்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

கல்யாண பிராப்த பூஜை

நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பமாக உள்ளது. திருமண வரன் ஒருவருக்கு சரியாக அமையாவிட்டால் மற்ற வசதிகளும் உறவுகளும் அமைந்தும் பலனில்லை. 40 ஆண்டுகள் இணை பிரியாது வாழும் தம்பதிகள் கருத்தொற்றுமையோடு மகிழ்ச்சியாக வாழ இறையருளும் வேண்டும் என்கிறது ஆன்மிகம். நல்ல திருமண வரன் கிடைக்க, பரிகாரக் கோயில்களுக்குச் சென்று பூஜிப்பது, விரதங்கள் மேற்கொள்வது, மந்திரங்கள் ஜபிப்பது என பல விதங்கள் உள்ளன. அதில் சிறப்பான ஒரு வழிபாடாக கல்யாண கங்கண பிராப்த பூஜை விளங்கி வருகிறது.

கல்யாண பிராப்த பூஜை

தெய்வத் திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது ஸ்ரீநிவாசக் கல்யாணம் தான். திருப்பதி ஏழுமலையானுக்கும் பத்மாவதித் தாயாருக்கும் திருமணம் நடத்தி வைத்தாலோ, அந்த திருமணத்தைப் பார்த்தாலோ நல்ல வரன் அமையும். திருமண வாழக்கை சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. பிறகு என்ன செய்யலாம் என்கிறீர்களா! கல்யாண வரம் தரும் சிறப்பான பூஜை ஒன்று பாண்டிச்சேரி தென்னம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீகல்யாண வேங்கடேசர் கோயிலில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கல்யாண கங்கண பிராப்த பூஜையில் கலந்து கொண்டாலே போதும். நல்ல வரன் அமைந்து அவர்கள் வாழக்கை வாழையடி வாழையாக சிறந்து விளங்கும் என்கிறார்கள் இந்த ஆலயத்து நிர்வாகிகள்.

கல்யாண பிராப்த பூஜை

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இரு யுகங்களாக இருந்து வரும் இந்த கோயில் திருமகள் தவமிருந்து நாராயணனை கல்யாணத் திருக்கோலத்தில் தரிசித்த தலம் என நம்பப்படுகிறது. ‘கல்யாண வெங்கடேச பெருமாள்’ என்ற திருநாமத்தில் அநேக இடங்களில் பெருமாள் எழுந்தருளி இருந்தாலும் இங்கிருப்பவர் விசேஷமானவர் என்கிறார்கள். இங்கு நடைபெறும் கல்யாண கங்கண பிராப்த பூஜை பூஜையில் சங்கல்பித்துக் கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டால் நல்ல வழக்கை அமையும் என்றும் உறவுகள் மீண்டும் ஒன்றிணைந்து மேம்படும் என்றும் கூறுகிறார்கள்.

சிறப்பு மிக்க இந்த தலத்தில் சக்தி விகடன் வாசகர்களின் குடும்பப் பிரச்னைகள் தீரவும் திருமண பந்தம் சிறப்பாக அமையவும் நல்ல வரன் கிடைக்கவும் வரும் 2025 ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. காலை 11.30 மணி அளவில் நடைபெறும் இந்த விசேஷ பரிகார பூஜையில் நீங்களும் கலந்துகொள்ளலாம். அதன் பலனாக, சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

இந்த பூஜையில் தரப்படும் கங்கணமும் குங்குமமும் உங்களுக்கான தீர்வாக அமையும். 48 நாள்களுக்குள் உங்களுக்கான வரன் சிறப்பாக அமையும்; உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் வளர்ச்சியையும் காண்பீர்கள் என்பது உறுதி. நம்பிக்கையோடு கலந்து கொள்ளுங்கள்! ஸ்ரீகல்யாண வேங்கடேசர் உங்கள் குறைகளைத் தீர்ப்பார்; சந்தோஷ உறவுகளை அளிப்பார்!

புதுச்சேரி-கடலூர் எல்லையில் ஏம்பலம் தென்னம்பாக்கத்தில் அழகர் சித்தர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகல்யாண வேங்கடேசர் ஆலயம் உள்ளது.

KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION

KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *