
பீகார் மாநிலத்தில் பிரபல பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பு கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் பிரபல பாம்பு பிடி வீரராக இருப்பவர் ஜே.பி.யாதவ். பல வருடங்களாக பாம்பு பிடி வீரராக இருக்கும் ஜே.பி.யாதவ் குடியிருப்புக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து இயற்கையான இடங்களில் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவர் வைசாலி மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த நாகப்பாம்பைப் பிடிக்கச் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஜே.பி.யாதவை பாம்பு கடித்திருக்கிறது. அதனைப் பொருட்படுத்தாத அவர் தொடர்ந்து பாம்பைப் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.