• July 9, 2025
  • NewsEditor
  • 0

”ஒரு மனிதன் நோயாளியாக இறப்பதற்கு முன், அவருக்கு மருந்துகள் மட்டும் போதாது.. நேசம், நம்பிக்கை, கருணை போன்ற மனித உணர்வுகளும் அவசியம்” என்று கூறுகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியர்

பெலிண்டா மார்க்ஸ் என்ற நர்ஸ், தனது பணியால் பலரது இறுதி தருணங்களை அர்த்தமுள்ளதாக மாற்றி வருகிறார்.

62 வயதாகும் இவர், இங்கிலாந்தில் உள்ள Sue Ryder Manorlands மருத்துவமனையில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இவர் அந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் கடைசி தருணத்தை அவர்களின் விருப்பப்படி மாற்றியமைக்கிறார்.

பிடித்ததை, அந்த தருணத்தில் நோயாளிக்கு செய்கிறார் பெலிண்டா. தான் மரணத்தை எண்ணி பயப்படுவதில்லை என்றும் இதுபோன்று அமைதியாக இறக்கும் பலரைக் கண்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

”அந்த தருணங்களில் அவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றமே பெரிய அர்த்தம் தருகிறது” என்கிறார் பெலிண்டா.

இறக்கும் தருணமும் மகிழ்ச்சியாக இருக்கலாம்

பெலிண்டா பணியாற்றும் மருத்துவமனையில், செல்லப்பிராணிகள் (நாய்கள், பூனைகள்) நோயாளிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றன. சில நோயாளிகளுக்காக குதிரைகள் கூட வாசலுக்கு வருகிறதாம். திருமணம் செய்ய விரும்பும் நோயாளிகளுக்காக திருமண விழாக்களும் நடத்தப்படுகிறதாம்.

இந்த மாதிரியான சிறிய சந்தோஷங்கள், நோயாளிகளின் கடைசி நாட்களில் ஒரு நல்ல நினைவாக இருக்கும் என்று பெலிண்டா இதனை செய்கிறார்.

பெலிண்டா நன்கொடை மற்றும் நலச்சேவை குழுக்களுடன் சேர்ந்து நோயாளிகளின் இறுதி ஆசைகளை கேட்டு இவற்றையெல்லாம் செய்கிறார்.

செவிலியர் வாழ்க்கையிலும் மாற்றம்

இறப்பை மரியாதையுடன் பார்க்கும் தனது பணியின் தாக்கம், பெலிண்டாவின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது.

அவரும், அவருடைய கணவரும் தங்களது உயில் மற்றும் இறுதி ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர்.

இறப்பு என்பது பயமூட்டும் விஷயமாக இல்லாமல், அமைதியான விடைபெறலாக மாற வேண்டும் என்பதையே பெலிண்டா மார்க்ஸ் தனது பணியால் நிரூபித்து வருகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *