
நமீபியா நாட்டுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால், அந்த நாட்டின் வரலாறும், சுற்றுலா இடங்களும் பேசப்படத் தொடங்கியுள்ளது. இந்த பதிவில் நமீபியாவின் ஒரு முக்கியமான இடம் பற்றி தான் சொல்லபோகிறோம்.
என்கோல்மான்ஸ்காப் (Kolmanskop) என்ற இடம் ஒருகாலத்தில் வைரங்களால் செழித்த இடமாக இருந்தது, இன்று அதன் நிலை என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
1900களின் தொடக்கத்தில் நமீபியாவின் நமிப் பாலைவனத்தில் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து ஜெர்மனியர்கள் அங்கு குடியேறி கோல்மான்ஸ்காப் என்ற நகரை அமைத்தனர்.
அங்கு அழகான வீடுகள், மருத்துவமனை,பள்ளிக்கூடம்,மின் வசதி, சுத்தமான குடிநீர் இருந்தது.பாலைவனத்தில் இத்தனை வசதிகள் இருந்தது அதிசயமாகக் கருதப்பட்டது.
வைரங்கள் இல்லை – மக்கள் வெளியே
அப்போது வரை செழித்து இருந்த ஊர், வைர வளங்கள் குறையத் தொடங்கியவுடன் சீர்குலைந்தது. அதுமட்டுமில்லாமல் தெற்குப் பகுதியில் அதிக வைரங்கள் இருப்பது தெரிய வந்ததால், மக்கள் அங்கு சென்று விட்டனர்.
1950 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஊர் முழுவதும் காலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒருகாலத்தில் செழிப்பாக இருந்த ஊர், மெதுவாக அமைதியாகியும், தனிமையாகியும் மாறியது.
மணலில் புதைந்த நகரம்
கோல்மான்ஸ்காப் நகரம் நமிப் பாலைவனத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் அடிக்கடி மணல் காற்று வீசும்.பல ஆண்டுகளாக மக்கள் இல்லாததால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பராமரிக்கப்படவில்லை. இதனால் மணல் மெதுவாக அங்கு இருந்த வீடுகளுக்குள் புகுந்து நகரத்தை முழுமையாக மூடியது
இன்று, இந்த ஊர் புகைப்படக்காரர்கள், சுற்றுலாப் பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள் ஆகியோரால் பார்வையிடப்படுகிறது.