
தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூலை 9) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது அதிமுக -பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “அண்ணன் எடப்பாடியின் மக்களைக் காப்போம் நிகழ்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘மக்களைக் காப்போம்’ என்ற ஊர்வலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திமுக அதைப் பார்த்துப் பயந்திருக்கிறது.
நிச்சயமாக தமிழகம் காக்கப்படும். பாஜக சார்பில் தனியாகவும் பிரசாரத்தை மேற்கொள்வோம்.
அண்ணன் எடப்பாடியார் கூட்டணிக் கட்சிகளின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்.
தனியாகப் பிரசாரத்தையும், விளம்பரத்தையும் நாங்களும் முன்னெடுப்போம். எங்குச் சென்றாலும் பிரதமர் மோடி நன்றாக இருக்க வேண்டும்.

நம் நாடு நன்றாக இருக்கிறது. எல்லா இடத்திலும் மோடிக்காக பூஜை செய்வேன். மோடியின் அரசு தமிழகத்திற்கு வர வேண்டும்.
அப்போதுதான் தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள். வட்ட இலையுடன் குளத்தில் தாமரை மலரும். இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும்” என்று பேசியிருக்கிறார்.