
திண்டுக்கல்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு விசாரணையின்போது போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இவர் மீது புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா, திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பேராசிரியை நிகிதா கல்லூரிக்கு வரவில்லை.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு சென்று பணியைத் தொடங்கினார். இதையறிந்த செய்தியாளர்கள் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர். உளவுத்துறை போலீஸாரும் அவரை கண்காணித்தனர். இதையடுத்து, கல்லூரி முடிந்து மாலையில் பின்வாயில் வழியாக வெளியேறினார். இந்நிலையில், அவர், ஜூலை 27-ம் வரை மருத்துவ விடுப்பில் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.