
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே செல்லும்போது வந்தேபாரத் ரயிலில் திடீர் புகை கிளம்பியதால், அந்த ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து இன்று காலை 6.15 மணிக்கு சென்னையை நோக்கி வந்தேபாரத் ரயில் புறப்பட்டது. காலை 8.45 மணிக்கு திண்டுக்கல் ரயில்நிலையத்தை கடந்து சென்றது. சில கிலோமீட்டர் கடந்த நிலையில் வடமதுரை ரயில்நிலையத்திற்கு முன்பாக வேல்வார்கோட்டை கிராமப்பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது இன்ஜினை அடுத்துள்ள பெட்டியில் இருந்து புகை கிளம்பியது. பெட்டி முழுவதும் புகை பரவத்துவங்கிய நிலையில், அங்கிருந்த பயணிகள் அலறியடித்து கூச்சல் இட்டனர். இதைகேட்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்.