• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தெற்கு ரயில்​வே​யில் 4 விரைவு ரயில்​களில் முன்​ப​திவு இல்​லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரிக்​கப்பட உள்​ளது. ரயில்வே வாரி​யத்​தின் உத்​தர​வுப்​படி, முன்​ப​திவு இல்​லாத பயணி​களின் தேவையை கருத்​தில் கொண்​டு, விரைவு ரயில்​களில் முன்​ப​திவு இல்லாத பெட்​டிகள் கூடு​தலாக இணைத்து இயக்​கப்​படு​கின்​றன.

அந்த வகை​யில், மேலும் 4 விரைவு ரயில்​களில் தற்​போதுள்ள 2 முன்​ப​திவு இல்​லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரித்து இயக்​கப்பட உள்ளது. மும்பை சி.எஸ்​.எம்​.டி. – எழும்​பூர் விரைவு ரயி​லில் (22157-22158) இரு மார்க்​கத்​தி​லும் வரும் செப்​.5-ம் தேதி​முதல் முன்​ப​திவு இல்லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரித்து இயக்​கப்​படும். எழும்​பூர் – சேலம் விரைவு ரயி​லில் (22154-22153) இரு மார்க்​கத்​தி​லும், வரும் செப்​.6-ம் தேதி​முதல் முன்​ப​திவு இல்​லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரித்து இயக்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *