
ஜீ தமிழ் சேனலில், ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘சரிகமப சீனியர்ஸ்- சீசன் 5’. அர்ச்சனா தொகுத்து வழங்கும் இதில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 28 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இந்நிகழ்ச்சி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் வெற்றியாளருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ரன்னர் அப் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் இரண்டாவது ரன்னர் அப் போட்டியாளருக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கமும் மக்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கமும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.