
புதுடெல்லி: பஞ்சாபில் காவல் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகள் மீதான 14 கையெறி குண்டு தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர் ஹேப்பி பாசியா என்கிற ஹர்பிரீத் சிங். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, காலிஸ்தான் தீவிரவாத குழுவான பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) ஆகியவற்றுடன் தொடர்புடையவர்.
இவரை பற்றிய தகவலுக்கு என்ஐஏ ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தது. இந்நிலையில் பாசியா கடந்த ஏப்ரல் 17-ம் தேதி கலிபோர்னியாவில் எப்பிஐ மற்றும் அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஹேப்பி பாசியா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.