
மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தமிழில் தனுஷின் ‘சீடன்’, சசிகுமார், சூரியுடன் ‘கருடன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர், தனது இன்ஸ்டாகிராம் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேஸ்புக்கில் தெரிவித்துள்ள அவர், “எனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கணக்கிலிருந்து தகவல் வந்தால் அது என்னுடையது அல்ல. அதிலிருந்து வரும் சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை கிளிக் செய்யவோ அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ வேண்டாம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மீட்கப்பட்டதும் அறிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.