
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். ஆக.14-ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகர் ஆமிர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அவர், 30 வருடத்துக்கு முன் ரஜினியுடன் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இதுபற்றி ஆமிர்கான் கூறும்போது, “ நான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய புதிதில், அதாவது 30 வருடத்துக்கு முன், ‘ஆதங்க் ஹி ஆதங்க்’ என்ற படத்தில் ரஜினியுடன் நடித்தேன். அது ஹாலிவுட்டில் வெளியான ‘காட்ஃபாதர்’ படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். அது சரியாகப் போகவில்லை. இப்போது லோகேஷ் கனகராஜ், ‘கூலி’ படத்துக்காக என்னை அணுகியபோது,ரஜினி சார் பெயரைக் கேட்டதுமே உடனடியாக சம்மதித்தேன்.