• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​சட்டப்பேரவை தேர்தலில் இரு​முனை போட்டி தான் நிலவும் என விசிக தலை​வர் திரு​மாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஏழை மாணவர்​களுக்​கான பள்​ளி, கல்​லூரி விடு​தி​களை சமூக விடு​தி​கள் என அறி​வித்​தமைக்​காக சென்​னை, திமுக தலை​மையகத்​தில் முதல்​வர் ஸ்​டா​லினை விசிக தலை​வர் திரு​மாவளவன் மற்​றும் எம்​எல்​ஏ-க்​கள் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் நேற்று சந்​தித்து நன்றி தெரி​வித்​தனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் திரு​மாவளவன் கூறிய​தாவது: பெரி​யார் வழி​யில் படிப்​படி​யாக சாதிமத அடை​யாளங்​களை துடைத்​தெறி​யும் வகை​யில் செயல்​படும் முதல்​வருக்கு பாராட்டை தெரி​வித்​தோம். மேலும், தேர்ச்சி பெற்ற 5,493 பேருக்கு கேங்​மேன் பணி வழங்க வேண்​டும். அரசு கல்​லூரி​களில் பணி​யாற்​றும் கணினி பயிற்​றுநர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும். பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்ற வலி​யுறுத்​தினோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *