
சென்னை: ‘நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 20 சதவீதம் இடங்கள் வழங்கப்படும்’ என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயர்கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதால் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்.