
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, வட சென்னை பகுதியில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 2 ஆயிரம் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திமுக அரசும், சென்னை மாநகராட்சியும், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தூய்மைப் பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்த ஆணையை வழங்கி உள்ளது.
இதனால், அப்போதைய திமுக ஆட்சியில், சென்னை மாநகராட்சியில் 2007-ம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் வேலை கேள்விக் குறியாகி உள்ளது. மேலும், வடசென்னையில் உள்ள மண்டலங்களில் பணிபுரியும் 2 ஆயிரம் பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் வசித்து வருவதாக தெரிகிறது.