
சென்னை: தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ம் தேதி முதல் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை – கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட், கன்னியாகுமரி – எட்டுரவட்டம் டோல்வே பிரைவேட் லிமிடெட், சாலைப்புதூர் – மதுரை டோல்வே பிரைவேட் லிமிடெட் மற்றும் நாங்குநேரி – கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்குகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தங்கள் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை நீண்ட நாட்களாக செலுத்தாமல் உள்ளதாகவும், நிலுவைத் தொகை ரூ.276 கோடியை இன்னும் செலுத்தாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.