• July 8, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

விகடன் வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

`மை விகடன்’ என்னும் களம் மூலம் வாசகர்கள் தொடர்ந்து தங்கள் எழுத்து திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட #உறவின்கடிதம் போட்டியில் 50க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. கடிதங்களை எழுதிய வாசகர்கள் இயக்குனர் ராம் அவர்களுடன் சேர்ந்து `பறந்து போ’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வில் பங்குபெற்றனர். ராமுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடந்தது. 

இந்த மாதம் சற்று வித்தியாசமான அதே சமயம் சுவாரஸ்யமான தலைப்பு : “திருமண நினைவுகள்”.  ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமண நினைவுகள் என்பது என்றென்றும் நிலைத்திருக்கும்.  

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, உறவுகளால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, கல்யாண நிகழ்வின்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள், அனுபவங்கள், சுவாரஸ்யமான நிகழ்வுகள், சவால்கள், மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுதலாம்.

பெண் பார்த்த படலம், நலங்கு, முகூர்த்தம் என ஒவ்வொரு ஸ்பெஷல் தருணத்திலும் நடந்த சுவாரஸ்யங்களை பகிரலாம். அல்லது மறக்க முடியாத சம்பவத்தை எழுதலாம்.  

நிச்சயதார்த்தம், அழைப்பிதழ் தேர்வு, மண்டபம் தேர்வு, அலங்காரம், உணவு ஏற்பாடு, சடங்குகள், செலவு போன்ற விஷயங்களில் இருந்த சவால்களை பற்றி எழுதலாம். காதல் திருமணத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், மனக்கசப்புகள் மற்றும் கொண்டாட்ட தருணங்கள் பற்றியும் எழுதலாம்.

உங்கள் கட்டுரைகளை இன்று தொடங்கி வரும் 30 ஆம் (30/07/2025) வரை அனுப்பலாம். கட்டுரை 600-800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். உங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். உங்களது கட்டுரையை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் காத்திருக்கிறது.

நினைவில் கொள்க:

நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூலை 30, 2025

உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.

கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *